சிம்புவின் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது.

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அரசியலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி .

இந்நிலையில் இந்நிலையில் மாநாடு படத்தின் டீஸர் காட்சி வெளியானது. ரீவைண்ட் மோடில் இந்த டீஸர் அமைந்துள்ளது. விறுவிறுப்பான இந்த டீஸரின் இறுதியில் SJ சூர்யா துப்பாக்கியை காட்டுவது போல் உள்ளது. சிம்பு பிறந்தநாளில் வெளியான இந்த டீஸரை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.