எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி – சினிமா விமர்சனம்

Must read

dhoni-review
இந்திய சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல உலக சினிமா ரசிகர்களே காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி இன்று உலகம் முழுவது ஹிந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ளது. ஒரு சாதாரன டிக்கட் கலெக்டர் எப்படி இந்திய அணியின் கேப்டன் ஆனார் என்றும் அவருக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் என்று அவரின் வாழ்கையில் நடந்த உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளனர். இதனால் தான் இத்திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது என்று நாங்கள் நினைக்கின்றோம்.
படத்தை பற்றி பார்ப்போம் :-
தோனி என்ற ஒரு மனிதரை நமக்கு எல்லாம் ஒரு சக்சஸ் ஃபுல் கேப்டனாகவும் பல சாதனைகளை படைத்தவராகவும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனிதராகவும் தான் தெரியும் ஆனால் தோனி இந்த இடத்தை வந்து அடைய அவர்பட்ட கஷ்டம் பற்றி விரிவாக கூறியுள்ளனர்
இதில் தோனியின் வாழ்கையில் நடந்த சுகம், துக்கம், கோபம், காதல், கல்யாணம் என எல்லாவற்றையும் தெளிவாகவும் மிக அழகாகவும் நம் கண்களுக்கு விருந்தாக சமர்பித்துள்ளனர்.
ms-dhoni-the-untold-story-poster
இத்திரைப்படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே மிக தெளிவாகவும் மிக அழகாகவும் இயக்கியுள்ளார். படத்தில் தோனி வேடத்தில் நடித்துள்ள சுஷாந்த் சட்டென பார்க்க நிஜ தோனியாகவே காட்சியலிக்கின்றார், அவர் கொடுக்கும் ஒரு ஒரு ரியாக்ஷனும் தெல்லத்தெளிவாக நம் கண்முன் தோனியை கொண்டு வந்து நிருத்துகின்றது. இவரிடம் இயக்குநர் நல்ல முறையில் வேலையை வாங்கியுள்ளார் என்று தெரிகின்றது.
மற்றப்படி படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் அவரவர் பணிகளை செம்மையாக செய்துள்ளனர், படத்தில் முதல் பாதியில் தோனியின் காதலியாக வரும் பெண்ணின் நடிப்பு படத்தில் தனியாகவும் அழகாகவும் இருந்தது, தோனியின் அப்பாவாக நடித்தவர் ஒரு சராசரி குடும்ப தலைவனாகவும் தனது மகனின் வாழ்கையை பற்றி கவலைப்படும் போது அவர் நடிப்புக்கு கிளாப்ஸ் குவிகின்றது
m-s-_dhoni_-_the_untold_story_poster
படத்தின் வசனத்தை பொறுத்தவரை வசனங்கள் அனைத்தும் நச்சுன்னு இருந்தது குறிப்பாக வாழ்கையில் நிறைய பவுன்சர்கள் வரும் அதையெல்லாம குனிந்து செல்ல கற்றுக்கொள் என்று சொல்லும் போது அட அட என்னா டயலாக் அப்படின்னு சொல்ல தோணுது.
படத்தின் மைனஸ் அப்படின்னு பாத்தா படத்தின் நீளம் மட்டும் தான் கிரிக்கெட் அப்படின்னா என்னானு கேக்குற மக்கள் படத்துக்கு வந்தா போர் அடிக்குது அப்படின்னு சொல்லிடுவாங்க.
மத்தபடி படத்தில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவன் இப்படி சரித்திர நாயகனாக மாறும் போது அதை நாம் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய விஷயம் தானே..

More articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article