சென்னை:
மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரையும், வெற்றிலைகேணி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரையும் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.