சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால்,உடடினயாக சென்னை அப்போலோவிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையோருக்கு வாய்ப் கொடுக்க வேண்டும் என பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி 70 வயதை கடந்தும் இன்னும் இளையோருக்கு வாய்ப்புகளை வழங்காமல் தானே நடித்து கல்லா கட்டி வருகிறார்.
சமீபத்தில்தான் வேட்டையன் என்ற படத்தில் க நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள நிலையில், தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட இருக்கிறது. பரிசோதனைக்குப்பின் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கம்ன, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.