சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பளித்தால், திமுகவில் இணைந்து பயணிப்பேன் என்று பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் இன்று அறிவித்தார்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல என்றும், அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அவரது வீட்டிற்கு நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினேன் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பளித்தால், திமுகவில் இணைந்து பயணிப்பேன் என்று பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், என் உடம்பில் ஓடுவது திராவிட ரத்தம், மீண்டும் பயணிப்பதில் எனக்கு எந்த நெருடலும் இல்லை என்று கூறினார்.