சென்னை: சேப்பாக்கம் உள்பட தமிழ்நாட்டில் 11 புதிய மின்பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மின் பகிர்மான கோட்ட அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். அதன்படி சென்னையில் சேப்பாக்கம் மற்றும் பல்லாவரம் பகுதியில் கட்டப்பட்ட கோட்ட அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Patrikai.com official YouTube Channel