டில்லி

மெரிக்க அதிபர் வெளிநாட்டு மருந்துகளுக்குத் தடை விதித்துள்ளதால் இந்திய மருந்து நிறுவனம் லுபின் லிமிடெட் தனது உற்பத்தியை அமெரிக்காவில் தொடங்க உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் மருந்துகள் குறித்த உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.  அதன்படி இனி அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாராகும் மருந்துகள் மட்டுமே வாங்க வேண்டும் எனவும் மற்ற நாடுகளில் தயாரிக்கப்படுவதை வாங்கக் கூடாது எனவும் கூறப்பட்டது.

அமெரிக்காவில் தற்போது டிரம்ப் அறிவித்துள்ள அமெரிக்கப் பொருட்களை மட்டும் வாங்கும் திட்டத்தின் கீழ் இந்த உத்தரவு இடப்பட்டது.  இது பல வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு கலக்கத்தை அளித்தது.  இதில் இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனமான லுபின் லிமிடெட் என்னும் நிறுவனமும் ஒன்றாகும்.

டிரம்பின் உத்தரவுக்கு இணங்க இந்த நிறுவனம் தனது மருந்துகளின் உற்பத்தியை அமெரிக்காவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.  இவ்வாறு அறிவித்த முதல் நிறுவனம்  லுபின் லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   ஆயினும் இந்த நிறுவனம் அமெரிக்காவில் எந்தெந்த மருந்துகளை உற்பத்தி செய்ய உள்ளது என்பதை அறிவிக்கவில்லை.