சென்னை: நாளை (மார்ச் 3ந்தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோவில்களில் நடைகள் அடைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம், எங்கெல்லாம் தெரியும்? அதை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா என்பதுகுறித்து ஆய்வாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் வெறுங்கண்ணால் பார்க்கும் வாய்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.அதாவது, சந்திரன் பூமியை சுற்றும். பூமி சுரியனை சுற்றுகிறது.அப்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மேல் நிழல் விழுகிறது. இதனால் பூமியின் நிழல் ஒரு பகுதி சந்திரனை மறைக்கும்.இந்த நிகழ்வை தான் சந்திர கிரகணம் (Lunar Eclipse) எனப்படுகிறது.
நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (மார்ச் 3ந்தேதி) நிகழ்கிறது. இது முழு சந்திர கிரகணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கிரகணம் நாளை பிற்பிகல் நிகழ்கிறது. இந்திய நேரப்படி, மாலை 4.45 மணிக்கு தொடங்குகிறது. முழு நிலவாக மாலை 5:10 க்கு காட்சி அளிக்கும். மேலும் மாலை 5:40 ல் முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தைச் சுற்றி இரத்த நிலவின் சிறந்த காட்சிகள் இருக்கும். சுமார் முழு நேர சூரிய கிரகணம் 58 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளது.
சந்திர உதயத்திற்கு முன் தொடங்கும் என்பதால், கிரகணத்தின் ஆரம்பம் இந்தியாவில் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், சந்திர உதயத்திற்குப் பிறகு, பெரும்பாலான இடங்களில் கிரகணத்தின் முடிவு மட்டுமே தெரியும்.
வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் கிரகணத்தின் காட்சித் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என்றும், மற்ற இடங்களில் பகுதியளவு இருள் தெரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடகிழக்கு இந்தியாவான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கொல்கத்தா, புவனேஸ்வர், பாட்னாவில் இறுதி நிலையான சந்திர கிரகணத்தை அடர் சிவப்பு நிறத்தில் பார்க்க முடியும் .
டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக பார்க்க முடியும்.
சந்திர கிரகணத்தையொட்டி, நாளை தமிழ்நாட்டின் பெரும்பாலான கோவில்கள் நடை சாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.