திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.அதாவது, சந்திரன் பூமியை சுற்றும். பூமி சுரியனை சுற்றுகிறது.அப்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மேல் நிழல் விழுகிறது. இதனால் பூமியின் நிழல் ஒரு பகுதி சந்திரனை மறைக்கும்.இந்த நிகழ்வை தான் சந்திர கிரகணம் (Lunar Eclipse) எனப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் நடை அடைக்கப்படும்
இந்த நிலையில், சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 3ம்தேதி 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 3ம்தேதி பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 3ம்தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
கிரகணம் முடிந்த பிறகு, இரவு 8.30 மணிக்கு பிறகு, கோயில் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு வார்கள் என்றும், எனவே இன்றும், நாளையும், (2, 3ம்தேதிகளில்) சுவாமி தரிசனத்திற்காக திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசனத்தில், நேர ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் டோக்கன்கள் இன்றும், நாளையும் வழங்கப்படாது.
மீண்டும் 4ம்தேதி சுவாமி தரிசனத்திற்கான சர்வ தரிசன டோக்கன்கள் வரும் 3ம்தேதி முதல் வழக்கம்போல் வழங்கப்படும்.
அதேபோல், வரும் 3ம்தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை (2ம் தேதி) தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 1ந்தேதி 75,428 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.56 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என்று தேவஸ்தான்ம் தெரிவித்து உள்ளது.
[youtube-feed feed=1]