லூயிஸ்வில்லா, அமெரிக்கா
அமெரிக்க நாட்டின் லூயிஸ்வில்லா நகரில் அமைந்துள்ள சாமி நாராயண் கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதம் விளைவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் இந்துக் கோவில்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அங்குள்ள பல கோவில்களில் சாமி நாராயண் கோவிலும் ஒன்றாகும். அமெரிக்காவின் லூயிஸ்வில்லா நகரில் உள்ள இந்த இந்துக் கோவிலுக்கு ஏராளமானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பகல் வேளைகளில் மட்டும் திறந்திருக்கும் இந்த கோவிலில் வார இறுதியில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்நிலையில் கடந்த திங்கள் இரவு முதல் செவ்வாய் காலைக்குள்ளான இடைப்பட்ட நீரத்தில் இந்த கோவிலில் மர்ம நபர்கள் தாக்கி சேதம் விளைவித்துள்ளனர். இந்த கோவிலில் உள்ள ப்டங்களை கருப்பு நிற வண்ணம் கொண்டு அந்த நபர்கள் மறைந்துள்ளனர். அத்துடன் கதவுகளை ஜன்னல்களையும் சேதப்படுத்தி உள்ளன்ர்.
இந்த தாக்குதல் குறித்து அந்நகர மேயர் கிரெக் ஃபிஷர், ”இந்த வெறுப்புணர்வு தாக்குடலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். நாம் எப்போது வெறுப்புணர்வுக்கு எதிராக இருக்கிறோம். நமக்குள் இருக்கும் ஒரு சில கோழைகள் இதை செய்துள்ளனர். இதனால் நமது ஒற்றுமை அதிகரித்துள்ளது” என இந்தியர்களுக்கு செய்தி அளித்துள்ளார்.