டில்லி:

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியங்களை வரும் மார்ச்க்குள் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானிய சிலிண்டர் மீதான விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தலாம் என ராஜ்யசபாவில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் மானியம் இல்லாத சிலிண்டர் விலை கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 1.50 உயர்த்தப்பட்டுள்ளது. இது உடனடிக அமலுக்கு வந்தது. விமான எரிபொருள் விலையும் 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்தை குறைக்கும் வகையில் தொடர்ந்து 5-வது மாதமாக இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 18.11 கோடி மானிய சிலிண்டர்களையும், 2.66 கோடி பேர் மானியமில்லா சிலிண்டர்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.