சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது., தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாகவும் அது இலங்கையையொட்டி தமிழக மாவட்டங்களின் கரையை கடக்கும் எனவும் கரையை கடந்த பின்னர் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடல் செல்லும் என்றும் அப்போது உள் மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்பது வானிலை தொடர்பான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]