சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்,  தமிழகத்தில்  லேசான மழைக்கு வாய்ப்பு இருபபதாகவும், மூடுபனி தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுடன் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் மூடுபனி நிலவும் எனவும் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

 சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (பிப்ரவரி 16)ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக வ ரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வானிலையில் லேசான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம், தற்போது பரவலாக மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், இந்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு மற்றும் அது வலுபெறும் தன்மையை பொறுத்து உள்ளூர் வானிலை மாறக்கூடும் என்றும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வானிலை மைய ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்த அறிவிப்புடன், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மூடுபனி நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது:

 இன்று (பிப்ரவரி 16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுடன் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் மூடுபனி நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை 7 மணி அளவில் நிலவிய பனி; இடம்- வண்டலூர் அருகே படப்பை அதிகாலை நேரங்களில் இந்த மூடுபனி காரணாக அருகில் இருக்கும் நபரை கூட பார்க்க முடியாத நிலை இருக்கும் என்பதால், நெடுஞ்சாலைகள் மற்றும் புறநகர் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் வானிலை மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே, வரும் இரண்டு நாட்களில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

[youtube-feed feed=1]