த்தமேடு

பேரணாம்பட்டு தொகுதிக்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் ஏராளமான தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக தி இந்து ஆங்கில செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்குச் சாவடி எண் 60/194

நேற்று நடந்த வாக்குப்பதிவு மிகவும் அமைதியுடன் நடந்ததாகவும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்கள் நடைபெற்றுள்ளதாக தி இந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை இங்கு காண்போம்.

பாப்பிரெட்டி பட்டி தொகுதியில் உள்ள நத்தமேடு கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் இடையே அடிக்கடி கலவரம் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் இங்கு வன்னியர் தொகை அதிகம் உள்ளது. இங்குள்ள வன்னியர்கள் பாமக ஆதரவாளர்கள் ஆவார்கள். இங்கு வசிக்கும் வன்னியர் இளைஞர்கள் ’வன்னியர் வாக்கு அன்னியருக்கு இல்லை’ என கூறுவது வழக்கமாகும்.

இந்த கிராமத்தில் நான்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வன்னியர்களுக்கு தனி சாவடியும் தலித்துக்களுக்கு தனி சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பாதுகாவலர் ஒருவர் இந்த பகுதிக்கு தாம் பலமுறை வந்துள்ளதாகவும் தனி தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டும் கூட பல தகராறுகள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரு இளைஞர் தனது கையில் வாக்களித்த அடையாளத்துடன் வாக்குச் சாவடி உள்ளே சென்று மீண்டும் வாக்களித்து விட்டு வட்ந்துள்ளார். அவர் தனது நண்பரிடம் ”நான் ஏழு முறை வாக்களித்து ரூ. 6000 பெற்றேன். உனக்கு எவ்வளவு கிடைத்தது” என காவலர் முன்னிலையில் தைரியமாக கேட்டுள்ளார். இது வாக்குச் சாவடி எண் 60/194 ல் நடந்துள்ளது.

இதே வாக்குச் சாவடியில் திருப்பூரில் பணி புரியும் இரு பெண்கள் பூத் ஸ்லிப் மட்டும் எடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லை. ஆயினும் அங்குள்ள பூத் ஏஜண்டுகள் அவர்களை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்துள்ளனர். இந்த வாக்குச்சாவடி அதிகாரி, “இன்று காலை முதல் நான் பல மிரட்டல்களை எதிர் கொண்டு வருகிறேன்.

இந்த வாக்குச் சாவடிக்குள் மொபைல் கொண்டு வந்து தாங்கள் வாக்களிப்பதை படம் எடுக்கின்றனர். எதையும் தடுத்தால் எங்களுக்கு மிரட்டல் விடப்படுகிறது. பலரிடம் அடையாள அட்டைகள் கிடையாது. அதை கேட்டாலும் மிரட்டலே பதிலாக உள்ளது.” என தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி மொபைலை உள்ளே எடுத்து வரக்கூடாது என கூறியும் வாக்காளரள் கவனிக்காமல் உள்ளே எடுத்து வருவதை செய்தியாளரும் பார்த்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி, “நான் இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். ஒரு இளைஞர் அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை திசை திருப்பும் போது பார்த்து பிடித்திருக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைத்தும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. நான் இதை விரைவில் பார்வையிட உள்ளேன். நல்லவேளையாக விஷமிகள் யாரும் கண்காணிப்பு காமிராவை அணைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

 

THANX : THE HINDU