டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ. 2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 20 நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக 2 மாதங்களாக பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ச்சியாக ரயில் மறியல் போராட்டத்திலும் இறங்கினர். ஆகையால் வட மாநிலங்களில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் கூறியதாவது: விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் பயணிகள், சரக்கு சேவைகளில் கிட்டத்தட்ட  2,000 முதல் 2,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.