கோவை:
மேம்பாலப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் டிரம் சரிந்து கீழே உள்ள கார்களின் மீது தார் கொட்டியதால் 5 கார்கள் சேதமடைந்தன. இதையடுத்து, சேதமடைந்த கார்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நெடுஞ்சாலைத் துறை ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையிலிருந்து ஆவாரம்பாளையம் சந்திப்பு வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் மேம்பாலத்தின் மீது பணியில் இருந்த நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான லாரியை ஓட்டுநர் பின் பக்கமாக இயக்க முயற்சித்தபோது, லாரி மேம்பாலப் பணிக்காக ஓரமாக வைக்கப்பட்டிருந்த தார் டிரம் மீது லாரி மோதியது. இதன் காரணமாக டிரம் சரிந்து, அதிலிருந்த தார் கீழே கொட்டியது.
அப்போது பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது தார் கொட்டிது. சுமார் 5 கார்கள் மீது தார் கொடியது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகளை வாகனங்களை நிறுத்தி, நெடுஞ்சாலைத் துறையினருடன் வாக்குவாதத்தில ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நெடுஞ்சாலைத் துறையினருடன் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் பேசி சமானதாப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து காரை சுத்தம் செய்து தர நெடுஞ்சாலைத் துறையினர் ஒத்துக்கொண்டதாகவும், சேத பகுதி களுக்கான நஷ்டஈடை சரி செய்வதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டிருந்தது.