
நைரோபி
கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஆப்ரிக்க நாடான கென்யாவின் கிழக்கில் பசியா பகுதியில் இருந்து இன்று காலை பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் எதில் வந்த லாரி ஒன்று பேருக்கு மேல் நேருக்கு நேர் மோதியது.
பேருந்து இந்த விபத்தில் நசுங்கி நாசமாகியது. லாரி மற்றும் பேருந்தின் ஒட்டுனர்கள் உட்பட சுமார் 30 பேர் இந்த விபத்தில் மரணம் அடைந்தனர். சுமார் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel