சென்னை,
தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென அறிவித்து உள்ளது.
சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை என்று உள்துறை அறிவிப்பு.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்தது என்பது சிபிஐ புகார் கூறியது.
இந்த விவகாரத்தில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதையடுத்து பலமுறை அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, தேடப்படும் நபர் மீது அவுட்லுக் சுற்றறிக்கையை மத்திய உள்துறை அறிவித்து உள்ளது.