ஆந்திர திரையுலக வரலாற்றிலேயே ஒட்டுமொத்த படத்துக்கும் சென்சார் தடை போட்டது, “சரணம் கச்சாமி” படத்துக்குத்தான் என்கிறார்கள்.

“தலித் மக்களின் வாழ்வியல், அவர்கள் சந்திக்கும் பிரச்சினை, அவர்களது உரிமைகள் என்று மிகச் சிறப்பாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம்ராஜ்” என்கிறார்கள் ஆந்திர திரையுலகினர்.

ஐதராபாத் பல்கலையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ரோஹித் வெமுலாவின் அவலம், ஊனாவில் கசையடிக்கு ஆளான தலித்துகள் துயரம்,

உத்தரப் பிரதேசத்தில் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லாக்கின் அவலம் என்று  ஒடுக்கப்ட்ட மக்களின் பல துயர சம்பவங்களைப் பேசுகிறது இந்த படம். படத்தின் அடிநாதம், இட ஒதுக்கீட்டுக்கீட்டின் முக்கியத்துவத்தை விள்ககுவதே.

 

இந்தப் படத்தைப் பார்த்த ஆந்திர சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கே தடை போட்டனர். இயக்குநர் பிரேம்ராஜ், “நீஙஅகள் விரும்பாத காட்சியை வெட்டுவீர்கள்.. இப்போது ஏன், மொத்த படத்துக்கும் தடை போடுகிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார்.

“அதெல்லாம் முடியாது. படத்தை வெளியிடவே கூடாது” என்று பதில் வந்திருக்கிறது.

பிறகு மும்பை மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை அனுப்பினார்கள், படக்குழுவினர். அங்கு ஓரிரு வெட்டுகளோடு U/A சான்றிதழும் கொடுத்து படம் வெளிவர அனுமதித்திருக்கிறார்கள்.

“சில காட்சிகளில் அம்பேத்கர் படத்தை காண்பிப்பதாலேயே ஒரு படம் ஒடுக்கப்பட்டோருக்கான படமாக ஆகிவிடாது. தன்னை அப்படி நினைத்துக்கொண்டிருக்கும், “கபாலி, காலா” படங்களின் இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தை அவசியம் பார்க்கவேண்டும்” என்ற குரலும் எழுந்திருக்கிறது.