580ஆண்டுகளுக்கு பிறகு இன்று விண்ணில் நிகழும் நீண்ட சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த கிரகணமானது பகுதி நேர சூரிய கிரகணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும், சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் ஏற்படுவது வழக்கம். பொதுவாக ஆண்டுக்கு இருமுறை சந்திர கிரகணமும் , 2முறை சூரிய கிரகணமும் நிகழும். இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் – பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும் தான் இந்தியாவில் தெரியும்.
இந்த நிலையில், 580 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணமானது, இன்று பகல் 12.48 மணிக்கு தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சந்திர கிரகணத்தின் கால அளவு மட்டும் சுமார் 3 மணிநேரம் 28 நிமிடம் 24 வினாடிகள் மட்டுமே.
இந்த கிரகணத்த வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பிராந்தியத்தில் தெளிவாக காணமுடியும். இந்தியாவில், அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் காண முடியும் என்று தெரிவித்துள்ளதுடன், தென்னிந்திய மாநிலங்களில் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சந்திர கிரகணம், ஏற்கனவே 1440 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த நீண்ட நேர சந்திரகிரகணம் நிகழ்ந்துள்ளது. அதையடுத்து, இன்று நிகழ்கிறது. இதுபோன்ற அடுத்த சந்திர கிரகணம், 2669 ஆம் ஆண்டு தான் நிகழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூமி -சூரியன்- நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளை சந்திர கிரகணம் என்று கூறுகின்றனர். நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்கிறோம் . அதுவே பாதியாக மறைத்தால் அது பகுதி சந்திரகிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.