ண்டன்

ம்மாதம் 29 வரை நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம்  நீட்டித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்குக் கடன் பெற்றுத் திருப்பி தரவில்லை.  தன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்னும் அச்சத்தில் அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.  லண்டனில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.   அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.    நிரவ் மோடியின் மீதான வழக்கை விசாரித்து வரும் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்ற உத்தரவின் படி அவர் 28 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுகிறார்.

அவ்வகையில் நிர்வ் மோடி நேற்று ஆஜரானபோது நீதிமன்றம் அவரது காவலை வரும் 29 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.   அத்துடன் அவரை நாடு கடத்த கோரும் வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி யின் முன்னிலையில் நடைபெற உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.