முதன்முதலாக மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த லண்டன் உயர்கல்வி நிறுவனம்!

Must read

லண்டன்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தனது வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது லண்டன் கல்லூரி ஒன்று.

பிரிட்டனில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் உயர்கல்வி நிறுவனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் முதல், லண்டன் பல்கலையின் பகுதியாக விளங்கும் இந்தக் கல்லூரி, தனது வளாகத்தில் மாட்டிறைச்சி விற்பனையை மேற்கொள்ளாது.

மேலும், தனது வளாகத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் போன்றவைகளுக்கு சிறிய விதிப்பு நடைமுறையையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் தவிர்க்கப்படக்கூடிய ஒன்றாக பார்க்கப்படும் மாட்டிறைச்சி, மேற்கத்திய முன்னேறிய நாடுகளில் மிக முக்கியமான உணவுப் பொருளாகும்.

More articles

Latest article