டில்லி:
5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. சராசரியாக காலை மணி வரை 12.11% வாக்குகள் பதிவாகி உள்ளது.
பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்). ஜார்கண்ட் (4 தொகுதிகள்), மத்திய பிரதேசம (7 தொகுதிகள்), ராஜஸ்தான் (12 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (7 தொகுதிகள்) என 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 51 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள் என்றும், அதில் ஆண் வாக்காளர்கள் 4.63 கோடி பேர், 4.12 கோடி பெண் வாக்காளர்கள் என்றும் தெரிவித்து உள்ளது. இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 51 தொகுதிகளிலும் மொத்தம் 96,088 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,
பீகார் – 11.51 சதவிகிதம்
ஜம்மு காஷ்மீர் – 1.36 சதவிகிதம்
மத்திய பிரதேசம் – 13.02 சதவிகிதம்
ராஜஸ்தான் – 14 சதவிகிதம்
உத்தரபிரதேசம் – 9.86 சதவிகிதம்
மேற்கு வங்காளம் – 16.56 சதவிகிதம்
ஜார்கண்ட் – 13.46 சதவிகிதம்
Chat Conversation End
Type a message, @name…