கமலின் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு மட்டுமல்லாது, தலைப்பு அறிவிப்புக்கான டீஸர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த டீஸரை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்புள்ள குரு… இது உங்களுக்கு எங்களுடைய பணிவான அன்பளிப்பு. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தயவுசெய்து எங்களை என்றென்றும் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்”. என பதிவிட்டுள்ளார் .