நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அதிலிருந்து மீண்டு வந்து, இன்று வாக்களித்திருக்கிறார்.