தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரது கதாநாயக பிம்பம் இனியும் செல்லுபடியாகாது என்பது அவர்களுக்கே தெரிந்த உண்மை .
சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க போவதாக செய்தி வந்து கொண்டிருந்தது.
கமலஹாசன் தயாரிப்பில்,ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் கதையில் ரஜினிக்கு முழுமையான திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது.
அந்த கதையில் ரஜினி சொன்ன மாற்றங்களை தற்போது சரிசெய்து மீண்டும் ரஜினியிடம் சொல்லியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்போது ரஜினிக்கு கதையில் திருப்தி ஏற்பட அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
https://twitter.com/LetsOTT/status/1279716318464208898?s=19
ரஜினி, ஏற்கனவே கமலுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கமலிடம் பேசி படத்தை தயாரிக்கக் கூறியுள்ளார். அதன்விளைவு ரஜினியின் 169 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் அப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதும் உறுதியாகிவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது