டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மக்களவை செயல்படாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர், 2020 21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிப்ரவரி 1ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் கூறியதாவது:

மொத்தம் உளளஉறுப்பினர்களுள்ள 19 கட்சிகளில் 16 கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளனர். இது அவர்களுக்கு அவமானகரமானதாக இல்லையா?

வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெறும் வரையிலும், விவசாயிகள் வெற்றி பெறும் வரையிலும் மக்களவை நடைபெறாது என்று தெரிவித்தார்.