டெல்லி: நாடாளுமனற் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தோடர் நடப்பாண்டு 19 அமர்வுகள் நடைபெறும் எனறும், ஜூலை 19-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தொடரின்போது மத்தியஅரசு 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி அவையை சுமூகமாக நடைபெறும் வகையிலும், மசோதாக்களுக்கு ஆதரவு கோரியும், வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.
18-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன.
அதுபோல, அன்றைய தினமே, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.