டெல்லி: ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 5வது நாளாக நாடாளுமன்ற அவைகள் முடங்கி உள்ளன. அடுத்தக்கூட்டத் தொடர் வரும் 20ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, கடந்த 13ம் தேதி தொங்கிய நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் ரகளை காரணமாக, கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் முடக்கப்பட்டு வருகிறது. இன்று 4வது நாளாக இரு அவைகளும் முடங்கிய நிலையில், அவையை 20ந்தேதி வரை ஒத்தி வைத்து இருஅவைகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
லண்ட;ன கேப்ரிட்ஜி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியினர், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனின் அக்கரை காட்டாமல், தங்களது கட்சியினருக்காகவே போராடி வருகின்றனர். இதனால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.
இன்று கூட்டம் தொடங்கியதும், மீண்டும் இரு தரப்பினரும் அமளியில் ஈடுபட்டதால் 5வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளும் வரம் 20ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.