டில்லி:

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.  வரும் 19ந்தேதி (நாளை மறுதினம்) 7வது கட்டமான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

முன்னதாக மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள  9 தொகுதிகளில் மட்டும் நேற்று இரவுடன்  பிரசாரம் ஓய்வடைந்தது.

அதே வேளையில் தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் அங்கும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வுபெறுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 6 கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், 7வது கட்ட வாக்குப்பதிவானது 8 மாநிலங்களை சேர்ந்த 50 தொகுதிகளில் மே 19ந்தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொகுதிகளில்,  கடந்த ஏப்ரல் மாதம் 29ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 30ந்தேதி இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடைசி கட்ட வாக்குப்பதிவானது,

பீகார் – 8 தொகுதிகள்

ஜார்கண்ட் – 3 தொகுதிகள்

மத்திய பிரதேசம் – 8 தொகுதிகள்

பஞ்சாப் – 13 தொகுதிகள்

மேற்கு வங்கம் – 9 தொகுதிகள்

சண்டிகர் – 1 தொகுதி

உத்தரபிரதேசம் – 13 தொகுதிகள்

இமாச்சல பிரசதேசம்  – 4 மொத்தம் 59 தொகுதிகள்.

இந்த தொகுதிகளில் இன்று  மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.