டெல்லி: தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. மோகன் தலேகர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என  மக்களவை சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.

பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான மோகன் டெல்கர். யூனியன் பிரதேசமான தாத்ரா- நாகர் ஹவேலி எம்.பியாக இருந்து வருகிறார். கடந்த 2019- ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர். 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் காங்கிரஸ்காரர்.

இவர்  தெற்கு மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஓட்டல் கடந்த பிப்ரவரி மாதம் 22ந்தேதி அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. . போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது அறையில் இருந்து, தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டகடிதம் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி செய்துவரும் மகா விகாஸ் அகாதி எம்.பி.க்கள், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யான சுப்ரியா சூலே தலைமையில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, தலாகர் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு கொடுத்தனர்.

[youtube-feed feed=1]