சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 29ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில்  இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கோவை தொகுதி வேட்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும்  மூன்று வாரங்களே  உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை  பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான நட்சத்திர வேட்பாளர்கள்  வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்று மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அவரின் தேர்தல் பரப்புரைக்கான பட்டியலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார். அதன்படி,   மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கும் அவரது பிரசாரம் பயணம்  ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவுபெறுகிறது.

அண்ணாமலை தேர்தல் பிரசாரம் விவரம்:

மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை,

மார்ச் 30-ல் சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி

மார்ச் 31-ல் கரூர், கோயம்புத்தூர்,

01.04.2024 முதல் 3.04.2024 வரை கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 4- ல் – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்

ஏப்ரல் 5- ல் – இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி

06.04.2024 முதல் 8.04.2024 வரை கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 9- ல் – கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை

ஏப்ரல் 10- ல் நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி

ஏப்ரல் 11 – ல் கோயம்புத்தூர்

ஏப்ரல் 12- ல் கோயம்புத்தூர், உள்ளிட்ட மக்களவைத் தொகுகளில் அண்ணாமலை 11 நாள்கள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு, ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவு செய்கிறார்.