டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளி யிட்டது. அதன்படி,,  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக  நடைபெற்றது.  முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல்  26ந்தேதி நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெற நிலையில்,  ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த நிலையில்,  அனைத்து தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.  மக்களவைத் தேர்தல் : அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன் 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அதே வேளையில்,  மும்பை வட மேற்கு தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 

பாஜக:240

தெலுங்கு தேசம்:16

ஐக்கிய ஜனதா தளம்:12

சிவசேனா (ஷிண்டே): 7

லோக் ஜன சக்தி:5

காங்கிரஸ் திமுக உள்பட 28 கட்சிகளைக்கொண்ட இண்டியா  கூட்டணி  234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ்: 99

சமாஜ்வாதி:37

திரிணாமுல் காங்:29

திமுக: 22

ராஷ்ட்ரிய ஜனதா தளம்: 3