லக்னோ:

5ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த மோடி, ஆட்சியின் கடைசி நாளான நேற்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போதுகூட செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு வழிப்பாதை போன்று அவரே சில தகவல்களை தெரிவித்தார். மேலும் பெரும்பாலான தகவல்களை பாஜக தலைவர் அமித்ஷாவே கூறினார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. மோடியின் ஒருலைப்பட்சமான செய்தியாளர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்து டிவிட் போட்டிருந்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 5 ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘நேற்றைய நடைபெற்ற மோடியின்  செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்  ‘‘மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது. இது பாஜக-வின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு’’ என்று அகிலேஷ்  கிண்டலடித்துள்ளார்.