கன்னியாகுமரி
வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் தங்களது வீடுகளை வண்ண, வண்ண கிறிஸ்துமஸ் மரங்களையும், வித, விதமான நட்சத்திரங்களையும் வாங்கி வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 28-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவித்துள்ளார.
Patrikai.com official YouTube Channel