
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன.
திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டேனி’ மற்றும் ‘காக்டெய்ல்’ ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக ‘லாக்கப்’ படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘லாக்கப்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஜீ5 ஓடிடி தளமே கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியீடு என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel