சிவகங்கை: மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (37), ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி (34). கடந்த 5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பினர். இதன்பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர்.
இதில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றபோது ஆகாஷ் டெலிசன் தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் போலீசாரில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
இதையறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகாஷ் டெலிசன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி சென்றனர். உறவினர்கள் 2ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெலிசன் பெற்றோர், எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர். எனது மனைவி சென்று பார்த்த போது காவல்துறையினர், டெலிசனை கடுமையாக அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார். திடீரென காவல்துறையினர் போன் செய்து என் மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து தாக்கியுள்ளனர். சாதிய ரீதியாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்’’ என்றார்.
[youtube-feed feed=1]