சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது தம்பியும், முக்கிய சாட்சியுமான பிரவீன் குமாருக்கு அரசு வேலை வழங்கி உள்ளதுடன், திமுக சார்பில் ரூ.5 லட்சம் பணம் உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும்  அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை அதிமுக உள்பட அனைத்து  அரசியல் கட்சிகளும்  கடுமையாக விமர்சித்ததுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின.

மேலும்,   இந்த விவகாரம் சமுக வலைதளங்களில் டிரெண்டிங்கான நிலையில், இறந்த அஜித்குமார் உடற்கூறாய்வு அறிக்கையில் பதபதைக்கும் தகவல்கள் வெளியாகின. அவரது  உடலில் 40க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததுடன், போலீசார் அவரை கடுமையாக தாக்கிய வீடியோவும் வைரலானது. இதை உயர்நீதிம ன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், அரசு யாரையோ காப்பற்ற முயற்சிப்பதாக கூறியது.

இதனால், வேறு வழியில்லாமல், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், உடனே அமைச்சர் பெரியகருப்பனை திருபுவனம் அனுப்பி, உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் பேச ஏற்பாடு செய்தார். அதன்படி அமைச்சரும், அஜித்குமார் தாயார் மற்றும் தம்பி என பலரை சந்தித்ததுடன், அஜித்குமார் தாயுடன் முதல்வர் ஸ்டாலினை பேச ஏற்பாடு செய்து, முதல்வரும் பேசினார். அப்போது,  அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலையும், வீட்டு மனை பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அஜித்குமார் சகோதருக்கு அரசு வேலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அரசு வேலைக்கான சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டாவை உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தாரிடம் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், முக்கிய சாட்சிகளான அஜித்குமார் தம்பிக்கு அரசு வேலை வழங்கியும், அவரது குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்கியும் உள்ளது. இதன்மூலம், முக்கிய  சாட்சியான நவீன் உள்பட அவரது குடும்பத்தினர் மற்றும் பலரும் பிறழ் சாட்சிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது என சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.