டெல்லி: லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந் நிலையில், நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தாலும் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மற்றொரு ஷாகின் பாக் போராட்ட முடிவாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று கூறினார். 140 நாள்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.