சென்னை:
மிழகத்தில்  இன்று (30/05/2020) காலை நிலவரப்படி ஊரடங்கை மீறிச்சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.8.84 கோடி வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4 கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை (31ந்தேதி)யுடன் முடிவடையும் நிலையில் 5வது கட்ட ஊரடங்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளை மடக்கும் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று (30ந்தேதி) காலை6 மணி நிலவரப்படி,  இதுவரை  மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  மேலும்,  5 லட்சத்து 53 ஆயிரத்து 543 பேர்கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டு உள்ளனர்.
இதவரை 4 லட்சத்து 33 ஆயரித்து 101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும்  வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.8 கோடியே 84 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.