மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா ஊரடங்கால் நடக்கும் அவலங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்றவற்றை தினம் தினம் அம்பலப்படுத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு நீட்டிக்கக்கூடாது, பஸ்களை பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்த மநீம கட்சி
பொதுச் செயலாளர் – கொள்கைப்பரப்பு குமாரவேல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனாவை பற்றி மருத்துவ உலகமே குழம்பித்தவித்த காலம் தாண்டி இப்போது மக்களே விழிப்புணர்வு பெற்று விட்டனர். இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி வைப்பது பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, வேலைக்கு
செல்ல இயலாத அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அபாயக்கட்டத்திற்கு செல்லவே வழி வகுக்கும். எனவே வரும் ஆகஸ்ட்31 க்குப்பின் ஊரடங்கு தேவை தானா என்று அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும்.
அதற்கு ஈ பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு பொதுப்போக்குவரத்தை ஓரளவா வது இயங்க வழிவகை செய்யவேண்டும். ஊரடங்கு பற்றிய ஆலோசனை கூட்டத் தில் இது குறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது
இவ்வாறு கட்சி பொதுச் செயாலாளர் குமார வேல் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel