மும்பை :

காராஷ்டிரத்தில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் பேசிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா பரவல் அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதால் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படாது எனத் தெரிவித்தார். கட்டுப்பாடுகள் தளரும்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்கும் என்பதால், படிப்படியாகத் தளர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் அரசின் அணுகுமுறையும், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. முற்றிலும் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். ஊரடங்கில் தளர்வு அளிக்கும் போது கொரோனா பாதிப்பு நெருக்கடி முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. 55-60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவவும், அரசாங்கத்திற்கு உதவவும் வேண்டும். ஏனெனில் இந்த சோதனை காலங்களில் அவர்களின் அனுபவம் முக்கியமானது.

கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானாக முன்வந்து வழங்க வேண்டும். பிளாஸ்மா சிகிச்சை நேர்மறையான முடிவுகளைக் காண்பிப்பதால், மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை அரசாங்கம் கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.