சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைவதால், தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் நீடிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா பெருந்தொற்று கடந்த 2020 ஆண்டு முதல் உலகம் முழுவதும் பரவி  கோரதாண்டவம் ஆடி வருகிறது. 2021 பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், ஜூலை மாதம் முதல், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ளது.  தற்போதைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ந்தேதி உடன் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, மேலும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொள்கிறார்.

மத்தியஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு மாதம் (ஆகஸ்டு) நீடித்து உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.