சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று. மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் துறை உயர்அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் இருந்தாலும் தினசரி பாதிப்பு 2ஆயிரம் அளவில் தொடர்ந்து வருவருகிறது. தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தமிழகஅரசு முயற்சி எடுத்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதற்கிடையில், தமிழகததில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூயி  ஊரடங்கு வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மருத்துவத்துறை வல்லுநர்கள் குழு, உயர்அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் , சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் துறை  அதிகாரிகள் பலருடன் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.