சென்ன்னை

த்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி அரசு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.  நாளைக் காலையுடன் முடிவடைய உள்ள ஊரடங்கை மேலும் ஒருவாரத்துக்கு அரசு நீட்டித்துள்ளது.   இதில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கோயம்பேட்டில்  குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார்.  அதற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம், “ஒவ்வொரு ஞாயிறும் பகல் 12 முதல் இரவு வரை குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.   கோயம்பேடு அங்காடியில் காய்கறி விற்பனைக்கு பிறகு தீவிர தூய்மைப்பணி நடைபெறும்.

கடந்த மே மாதம் 9,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை 6,340 வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். வியாபாரிகள்  தடுப்பூசி போடாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்

தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு விதிகளைப் பயன்படுத்த வேண்டும்.  சென்னை வாசிகள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்ததால் கொரோனா பாதிப்பு குறைகிறது.  எனவே தொடர்ந்து அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.