மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு

Must read

ரித்வார்

த்தரகாண்டில் மேலும் இரு வாரங்களுக்கு அம்மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியது.  இதனால் தற்போது பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.   இதையொட்டி கொரோனா பரவல் குறையும் மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   உத்தரகாண்ட் மாநிலத்திலும் இதே நிலை உள்ளது.

ஆனால் அம்மாநில உயர்நீதிமன்றம் சார்தாம் யாத்திரை நடத்த அனுமதி அளித்தது.  இதனால் ஹரித்வாருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது.   இதையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு கடுமையாக்கபபட்டது.,

தற்போதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து அம்மாநில் அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை காலை 6 மணி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article