ஓசூர்
வரும் 14 ஆம் தேதி அன்று ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நடைபெற உள்ளது. எனவே ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு (சார்-ஆட்சியர் அலுவலகம் உள்பட) வரும் 14-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
எனினும் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel