சென்னை:
டுத்த மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற காங்கிரஸ் கட்சி சார்பில்  அனைத்து மாவட்டங்களுக்கும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துthiruvavukarau உள்ளார்.
2016 உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளை (27.9.2016) முதல் தேர்தலில் போட்யிடுபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களிலோ அல்லது பொது திருமண மண்டபங்களிலோ காலை 10 மணி முதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருப்பமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள், எந்த பதவிக்கு போட்டியிட விரும்புகிறார்களோ அதற்கான கட்டணம் செலுத்தி விருப்பமனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்களுக்கான கட்டண விவரம்:
மாநகராட்சி உறுப்பினர் (பொது)                                       :      ரூ. 2000
மாநகராட்சி உறுப்பினர் (பெண்கள்& SC / ST)                :      ரூ. 1000
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் (பொது)                :      ரூ. 1000
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் (பெண்கள்& SC / ST)  :      ரூ. 500
நகராட்சி வார்டு உறுப்பினர் (பொது)                                    :      ரூ. 1000
நகராட்சி வார்டு உறுப்பினர் (பெண்கள்& SC / ST)             :      ரூ. 500
பேரூராட்சி வார்டு உறுப்பினர் (பொது)                                :      ரூ. 1000
பேரூராட்சி வார்டு உறுப்பினர் (பெண்கள்& SC / ST)         :      ரூ. 250
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (பொது)                       :      ரூ. 2000
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  (பெண்கள்& SC / ST):      ரூ. 1000
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி உறுப்பினர்கள் விவரம்:
chennai