சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றக்கோரி பல மாவட்டங்களில் அதிமுக கட்சியினரே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை சென்னை மாநகராட்சி நந்தம்பாக்கம் 158 வட்ட செயலாளர் பர்மா கண்ணன் மனைவிக்கு சீட் கொடுக்காமல், நந்தம்பாக்கம் ராஜசேகர் மனைவி சீட் கொடுத்திருப்பதை கண்டித்தும், மீண்டும் நாச்சியாருக்கு சீட் ஒதுக்க வலியுறுத்தியும்,
சென்னை வர்த்தக மையம் அலுவலகத்தின் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏரி அதிமுக பாசறை சேர்ந்த மணிகண்டபாபு, தேவகுமார், தினேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கீழே இறக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆண்டு தமிழக முதல்வரை அவதூறு பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை கண்டித்து இதே 158வது வட்டகழக செயலாளர் பர்மா கண்ணன் ஆதரவாளர்கள் இதே செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்தது குறிப்பிடதக்கது….
Patrikai.com official YouTube Channel