சென்னை:
ள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு பெஞ்சு முன் மேல்முறையீடு செய்கிறது தேர்தல் ஆணையம்.
உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்  அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நாளை  மேல்முறையீடு செய்கிறது.
TNEC2
தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த  19-ந் தேதி  தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில்,  சுழற்சி முறை இல்லை என்றும்,  இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசானைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும் என திமுக சார்பில் ஆலந்தூர் பாரதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிரடி தடை விதித்தார்.
இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.  இந்த வழக்கு நாளை  இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என  தெரிகிறது.